முல்லைத்தீவு பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் பணியாளர்களின் உடல்,உளநலனை மேம்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டு நிகழ்வானது நேற்றைய தினம் 04.04.2024 அன்று மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இவ்விளையாட்டு நிகழ்வில் கரைதுறைபற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேச சபைகளின் உத்தியோத்தர்கள் மற்றும் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் துடுப்பாட்டம், வலைப்பந்து, தேசிக்காய் கரண்டி, கைகளி னால் நீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், மா ஊதி காசு எடுத்தல், 100M அஞ்சலோட்டம் என இடம்பெற்ற பல்வேறு விளயாட்டுக்களில் ஆர்வத்துடன் பங்குபற்றினர். மனமகிழ்வுடன் பாடசாலை வாழ்க்கையினை ஞாபகப்படுத்தும் வகையில் இடைவேளை நிகழ்வாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் உடற்பயிற்சி நிகழ்வும் வழங்கப்பட்டது.
2024 ம் ஆண்டிற்கான கரைதுறைபற்று பிரதேச சபையின் சபை நிதி வேலைகளுக்கான கேள்வி அறிவித்தல்.
இக் கேள்வி அறிவித்தல்களுக்கான முன்னோடி கூட்டம்
05.04.2024 ம் திகதி காலை 10 மணிக்கு கரைதுறைபற்று பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.…
See more