ஒன்லைன் மூலமான நுலக சேவை

முல்லைத்தீவு உபஅலுவலகத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தின் நூல்களை இணைய வழியில் பெற்றுக் கொள்வதற்காக நூல்களைப் பதிவேற்றம் செய்யும் செயற்பாடு பொதுநூலகத்தில் இடம்பெற்றது.

கழிவு முகாமைத்துவ செயற்பாடு

எமது சபையினால் கழிவு முகாமைத்துவத்திற்கென முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியான இடம் தெரிவு செய்யப்பட்டு கழிவுகளை பகுத்து அவற்றினை மீள்சுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வீதி விளக்குகள் பொருத்துதல்

முள்ளியவளை உபஅலுவலகத்திற்குட்பட்ட துரைவீதியில் இன்று சபையினால் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு கடற்கரையை அழகுபடுத்துதல்

முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில்  சிறுவர்களுக்கேற்ற விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டதுடன் அனைத்து வயதுப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில் கல்இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதி

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முல்லைத்தீவு உபஅலுவலகத்தின் பொது நூலகப் பகுதியில் சிறுவர்களுக்கான இலகு விளையாட்டுப் பகுதி ஆரம்பிக்கப்பட்டு சிறார்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதனைப் பொது மக்கள் வாரநாட்களில் காலை 8.30மணி முதல் மாலை 4.30மணி வரையும் பயன்படுத்தலாம்.

டெங்கு நோய்த் தடுப்பு செயற்பாடு

சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முல்லைத்தீவு சுகாதார பணிமணை, முல்லைத்தீவு பொலிஸ், முல்லைத்தீவு இராணுவத்தினருடன் இணைந்து சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சபை மேற்கொண்டிருந்தது.  

முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தினை அபிவிருத்தி செய்தல்

2024 இல் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் 90மில்லியன் நிதி உதவியுடன் மத்திய பேரூந்து நிலையம் பாரிய அளவில் அபிவிருத்தி செய்ய திட்ட ஏற்பாடு.      

புதிய செயலாளரைக் கௌரவிக்கும் நிகழ்வு

கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மதிப்பிற்குரிய செயலாளர்  திருமதி. ராஜயோகினி ஜெயக்குமார் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது 2024.02.26ஆந் திகதி சபையின் மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை அலுவலகத்தின் பணியாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

2024ஆம் ஆண்டுக்கான பணிகளை ஆரம்பித்தல்

2024 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் 2024ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது சத்தியப் பிரமாணத்துடன் எமது சபையின் செயலாளரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.